Saturday, April 12, 2014

12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை, சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள்

 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை, சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள் 
* கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகரமாக எழுத, புரிதல் என்பது மிகவும் முக்கியம். கேள்வித்தாளில் பெரும்பான்மையான அம்சங்கள், ப்ரோகிராமிங் தொடர்பானவை என்பதால், அத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற, ப்ரோகிராமிங்கை தெளிவாகப் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
* தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, முக்கியமான terms மற்றும் concept -களுக்காக, உங்களின் சொந்த குறிப்புகளைத் தயாரிக்க வேண்டும். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கற்பதற்கு சிறந்தவை என்றாலும், ரிவிசன் என்று வரும்போது, உங்களின் சொந்த குறிப்புகள், உங்களுக்குத் தேவையான தகவலைப் பெற உதவும்.
* உங்களுக்கான சந்தேகங்களுக்கு, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவே தீர்வு காணுங்கள். அதற்காக, உங்களின் 11ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் புத்தகம் மற்றும் reference புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனாலும், ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதே ஒரே சிறந்த வழி.
* உங்களின் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகள் மற்றும் excercise -களையும் நன்கு பயிற்சி செய்து கொள்ளவும்.
* Definition -களை ஞாபகப்படுத்திக் கொள்ள flashcards பயன்படுத்தவும்.
* Definitions மற்றும் அவற்றின் அடிப்படைப் பயன்பாடுகள் பற்றி மிகத் தெளிவாக படித்து அறிந்துகொள்ளவும். தலைப்புகளை விளக்குமாறு அடிக்கடி கேள்விகள் கேட்கப்படும்.
* ப்ரோகிராமிங் பற்றி நினைவுப்படுத்திக் கொள்ளவும், புரிந்துகொள்ளும் வகையிலும், flowcharts -களை உருவாக்கவும்.
* சாதாரண தாள்களில், ப்ரோகிராம்களை எழுதிப் பார்த்து பயிற்சி எடுக்கும்போதுகூட, முறையான இடைவெளி விட்டே எழுத வேண்டும். அப்போதுதான் தேர்வை எழுதும்போது அந்தப் பழக்கம் ஏற்படும்.
* உங்களுக்கு நேரமிருந்தால், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக, பல்வேறான வண்ண பேனாக்கள் மற்றும் பென்சில்களைப் பயன்படுத்தவும். இதன்மூலம் காட்சி முறையில்(visual) உங்களால் நினைவில் வைக்க எளிதாக இருக்கும்.
* பிராக்டிகல் வகுப்புகளின்போது கவனம் செலுத்துவது முக்கியம். இதன்மூலம், அதிக பிராக்டிகல் மதிப்பெண்களை உங்களால் பெற முடியும். பிராக்டிகல் பகுதியில் மொத்தம் 30 மதிப்பெண்கள் அடங்கியுள்ளன. இதன்மூலம் உங்களின் சந்தேகங்களும் தீர்க்கப்படும்.
* கணினியில் ப்ரோகிராம் பயிற்சி செய்யவும். இதன்மூலம், எத்தனை ப்ரோகிராம்களை உங்களால் வெற்றிகரமாக எழுத முடியும் என்பதை கண்டறிய முடியும்.
* Boolean Algebra -க்காக நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, சார்ட்டுகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
* விபரங்கள்(details) தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கவும். ஏனெனில், தவறவிடப்பட்ட ஒரு சிறு punctuation கூட, உங்களின் ஒட்டுமொத்த பதிலையும் பாதித்துவிடும்.
* முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை பயிற்சி செய்யவும். இதன்மூலம், பேட்டர்ன்களை புரிந்துகொள்வதோடு அல்லாமல், உங்களின் முன்தயாரிப்பை சோதித்துக் கொள்வதோடு, உங்களின் பலவீனம் என்ன என்றும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
* நீங்கள் மாதிரியாக எழுதிப் பார்த்த பேப்பர்களை திருத்துவதற்கு தவறக்கூடாது. இதன்மூலம் உங்களால் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.
* நீங்கள் பிற்காலத்தில் கணிப்பொறி நிபுணர் அல்லது மருத்துவர் என்று என்னவாக ஆனாலும் சரி. கணினி அறிவு என்பது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. கணினி அறிவு என்பது ஒருவருக்கு, எப்போதும் பயன்தரக்கூடிய ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.
* கணிப்பொறி அறிவியல் தேர்வில் சாதிக்க, தர்க்கம் மற்றும் புரிந்துணர்வைப் பயன்படுத்துதல் மிகவும் அவசியம் என்பதை உணருங்கள்.


No comments:

Post a Comment